டாக்கா: மியன்மாரில் ரோஹிங்யா மக்கள் மீது அந்நாட்டு ராணுவம் ஒடுக்குமுறையைக் கையாண்ட போது பலர் கொல்லப்பட்டனர். ராணுவத்தினரின் அட்டூழியங் கள் மற்றும் ராக்கைன் மாநிலத் தில் நீடித்த சண்டைக்குப் பயந்து ஆயிரக்கணக்கான ரோஹிங்யா மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்று அருகில் உள்ள பங்ளாதேஷில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். மியன்மார் ராணுவத்தின் ஒடுக்குமுறையால் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி பலர் இனப்படுகொலை செய்யப்பட் டனர். இது நடந்து ஓராண்டு ஆகிறது.
இந்நிலையில் ஆயிரக்கணக் கான ரோஹிங்யா அகதிகள் மியன்மார்-பங்ளாதேஷ் எல்லையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலர் ஊர்வல மாகச் சென்றனர். நேற்று நடந்த பேரணிகளிலும் பலர் கலந்து கொண்டனர். "ஐநா அமைப்பிடமிருந்து எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்,"என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலர் வலியுறுத் தினர். "சென்ற ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி மியன்மாரில் நாங்கள் இனப்படுகொலையை சந்தித் தோம். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று ஆர்ப்பாட்டத்தில கலந்துகொண்ட ஒருவர் கூறினார். ரோஹிங்யா அகதிகளைக் காப்பாற்றவும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டை களை பலர் எடுத்துச் சென்றனர்.
சென்ற ஆண்டு நடந்த துயரச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக இங்கு கூடியிருப்பதாக மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் கூறி னார். ரோஹிங்யா மக்கள் அங்கீ கரிக்கப்பட வேண்டும் என்றும் சொந்த நாட்டில் தாங்கள் இல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 40 வயது ஹுசேன் என்பவர் கூறினார்.