அம்னோ ஆண்டுக் கூட்டம் இரண்டு நாட்களுக்கு மட்டுமே

பெட்டாலிங் ஜெயா: வழக்கமாக ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் அம்னோ ஆண்டுக் கூட்டம் இவ்வாண்டு இரண்டு நாள் மட்டுமே நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் அக்கூட்டம் நவம்பர் பிற்பகுதியில் அல்லது டிசம்பர் முற்பகுதியில் கோலா கலமாக நடக்கும். தேர்தல் தோல்விக்குப் பின்னர் அம்னோ ஆண்டுக் கூட்டத்தை ஆடம்பர மின்றி நடத்த அக்கட்சி தீர்மானித்திருப்பதாகக் கூறப் படுகிறது. அடுத்த மாதம் அம்னோ ஆண்டுக் கூட்டம் நடைபெற வுள்ளது. அம்னோ மகளிர், இளைஞர் அணி அவற்றின் கூட்டங்களைச் செப்டம்பர் 29ஆம் தேதியும் கட்சியின் கூட்டம் செப்டம்பர் 30ஆம் தேதியும் நடக்கும் என அம்னோ வட்டாரங்கள் தெரிவித்தன. முந்தைய அம்னோ கூட்டங் களில் செய்திகள் சேகரிக்க மலேசியாகினிக்கும் வேறு சில இணையத் தளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை இன்னும் தொடர் கிறதா என்பது தெரியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!