பேங்காக்: தாய்லாந்து குகையி லிருந்து 13 பேர் மீட்கப்பட்ட சம் பவம் உலக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொரு கணமும் திகில் படம் போன்று இருந்த இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பேங்காக்கில் உள்ள பிரபல 'சியாம் பாரகன்' கடைத் தொகுதியில் கண்காட்சி திறக்கப் பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளை நேரில் காண்பது போன்ற அனுபவத்தை இந்த கண்காட்சி தரும் என்று இதனை ஏற்பாடு செய்துள்ள கலா சார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் காற்பந்துக் குழுவைச் சேர்ந்த 12 சிறுவர்களும் அவர்களுடைய பயிற்சியாளரும் தாம் லுவாங் குகையில் சிக்கிக் கொண்டனர். குகையின் நுழை வாயிலிலிருந்து செல்லும் குறுகிய பாதையில் வெள்ளம் நிரம்பி மூடி யிருந்ததால் அவர்கள் வெளியேற முடியாமல் குகைக்குள்ளே ஒரு மேட்டுப் பகுதியில் தங்கி உயிருக் காகப் போராடினர். காணாமல்போன இவர்களை தேடும் முயற்சியில் தாய்லாந்தின் போலிசார், ராணுவம் உட்பட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டன. கடைசியில் இவர்கள் குகைக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்குளிப்பாளர்களின் உதவியுடன் ராணுவம், மீட்பு நட வடிக்கைகளை ஒருங்கிணைத்துத் திட்டமிட்டு சிறுவர்களை வெளியே கொண்டு வந்தது. வெள்ளத்தில் மூழ்கி வெளியே வர வேண்டியிருந்ததால் சிறுவர் களுக்கு மயக்க மருந்து கொடுக் கப்பட்டது. கடைசி நபர் ஜூன் 23ஆம் தேதி குகையிலிருந்து மீட்கப்பட்டார். சிறுவர்களும் பயிற்சியாளரும் குகையில் சிக்கியிருந்த சமயத்தில் அவர்களுக்குத் தேவையான உணவு, சுவாசிப்பதற்குத் தேவை யான பிராண வாயு போன்ற வசதி களும் செய்து தரப்பட்டன.