பிரேசிலில் அணை உடைந்து பலர் பலி; 200 பேருக்கு மேல் காணவில்லை

புருமடின்ஹோ: பிரேசிலில் அணைக்கட்டு உடைந்ததில் 200 பேருக்கு மேல் காணாமல் போயினர்.
இவர்களைத் தேடி மீட்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அணை உடைந்த சில மணி நேரங்களில் ஏழு உடல்கள் கண்டுபிடிக்கப் பட்டன.
ஆனால் 200 பேருக்கு மேல் காணாமல் போனதால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று புரும டின்ஹோ நகர மேயர் அவிமார் டி மெலோ பார்சிலோஸ் கூறினார்.
‘வேல் எஸ்ஏ’வுக்குச் சொந்த மான எஃகு சுரங்கத்தில் அணை உடைந்தது. இந்த நிலையில் விபத்து குறித்துப் பேசிய வேல் தலைமை நிர்வாகி ஃபேபியோ ஷவர்ட்ஸ்மேன், மொத்தமுள்ள 300 ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே பணியில் இருந்தனர் என்று கூறியுள்ளார்.
இதன்படி பார்த்தால் 100 பேர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மதிய உணவு வேளையில் விபத்து நிகழ்ந்ததால் சுரங்கத்தின் அலுவலகங்களும் உணவகமும் ஊழியர்களோடு அடித்துச் செல்லப்பட்டன என்றும் நிர்வாகி ஃபேபியோ ஷவர்ட்ஸ்மேன் கூறி னார். இதற்கிடையே பேரிடர் நிகழ்ந்த இடத்துக்கு அதிபர் விரைந்துள்ளார்.
 

Loading...
Load next