‘உயிருடன் இருக்கிறேன்’

மணிலா: தாம் இறந்துவிட்டதாகப் பரவி வந்த புரளிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஃபேஸ்புக்கில் நேரலையாக நேற்று முன்தினம் தோன்றினார் பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே.
“நான் மரணமடைந்துவிட்டதாக பரவி வரும் புரளியைக் கேட்டு அதை நம்புபவர்கள் எனது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று நேரலைக் காணொளியில் தோன்றிய அதிபர் டுட்டர்டே நையாண்டியாகக் கூறி னார்.
அதிபர் டுட்டர்டேயின் இந்தக் காணொளியை பிலிப்பீன்சின் ஊடகங்கள் டுவிட்டர் மூலம் பகிர்ந்துகொண்டன.
அதிபர் டுட்டர்டேயும் அவரது துணைவியார் திருவாட்டி ஹனி லட் அவன்செனாவும் ஒன்றாக அமர்ந்து செய்தித்தாட்களில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்திகள் பற்றி கலந்துரையாடுவதையும் அதிபர் டுட்டர்டே  சில பலகார வகைகளை சாப்பிடுவதையும் காணொளி காட்டியது.
கடந்த அக்டோபர் மாதத்தில் அதிபர் டுட்டர்டே மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்.
அவரது குடல் பரிசோதிக்கப் பட்டதில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்தது. 
இந்தத் தகவல் வெளியான திலிருந்து அதிபர் டுட்டர்டேயின் உடல்நலம் குறித்து பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று உடல்நலம் இல்லாத காரணத்தி னால் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளவில்லை என்றார் அதிபர் டுட்டர்டே. 
உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டால் அதிபர் பதவியிலிருந்து தாம் விலகுவது உறுதி என்று அதிபர் டுட்டர்டே தெரிவித்திருந்தார்.
ஆனால் தமக்குப் பதிலாக எதிர்க்கட்சியினருக்குத் தலைமை தாங்கும் துணை அதிபர் லெனி ரோபிடேடோ அதிபராவது குறித்து அவர் அக்கறை தெரிவித்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்

19 Jun 2019

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2019

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

ஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்