மகாதீர்: அம்னோ=பாஸ் சேர்ந்து   செயல்பட்டதால் தோல்வி

மலேசியாவில் செமினி தொகுதி இடைத்தேர்தலில் பாஸ் கட்சியும் தேசிய முன்னணியும் ஒத்துழைத்த  காரணத்தால் பக்கத்தான் ஹரப் பான் தோல்வி அடைந்துவிட்டது என்று பிரதமர் மகாதீர் முகம்மது கூறினார். 
நாட்டில் சென்ற ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்தத் தொகுதியில் டாக்டர் மகா தீர் கூட்டணி வெற்றி பெற்றது. 
அப்போது தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் இரு  தரப்புகளாக மோதின என்பதை புத்ராஜெயாவில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் செய்தி யாளர்களிடம் பேசியபோது பிரதமர் சுட்டிக்காட்டினார். 
இது ஒருபுறம் இருக்க, மலே சியாவின் 1 டிரிலியன் ரிங்கிட் கடன் தொடர்பில் தன்னுடைய நிர்வாகம் அளித்த உறுதிமொழி களை உடனேயே நிறைவேற்ற முடி யாமல் போனதும் தேர்தல் தோல் விக்கு ஒரு காரணம் என்றார் டாக்டர் மகாதீர். 
இருந்தாலும் அந்தத் தோல்விக் கான காரணங்களை ஆராய வேண்டிய தேவை இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
இதனிடையே, மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செமினி தொகுதி இடைத் தேர் தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குக் கிடைத்துள்ள தோல்வி மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப் ராஹிம் தெரிவித்தார். 
பக்கத்தான் ஹரப்பான் கொடுத்த வாக்குறுதிகளில் சில வற்றை இனிமேல்தான் நிறைவேற்ற வேண்டிய நிலை இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.