தேசிய முன்னணியில் பிளவு: புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் மஇகா, மசீச

மலேசியாவின் எதிர்த்தரப்பு தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் முக்கிய இரு கட்சிகள் அம்னோவைக் கைவிட்டு புதிய கூட்டணியை அமைக்கப்போவ தாக அக்கட்சிகளின் தலைவர் கள் தெரிவித்துள்ளனர்.
தனது நாடாளுமன்ற உறுப் பினர் ஒருவரின் இனவாதக் கருத்துகளை அம்னோ தலை வர்கள் கண்டுகொள்ளாததைத் தொடர்ந்து இந்த முடிவிற்கு தாங்கள் வந்திருப்பதாக மலேசிய இந்தியர் காங்கிரஸ், மலேசிய சீனர் சங்கம் ஆகியவற்றின் தலை வர்கள் நேற்று கூறியதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி குறிப் பிட்டது.
தேசிய முன்னணியைக் கலைத்துவிட்டு புதிய கூட்ட ணியை அமைக்குமாறு கடந்த டிசம்பர் 2ஆம் தேதி நடத்தப்பட்ட வருடாந்திர பொதுக்கூட்டத் திற்குப் பின் தாங்கள் யோசனை தெரிவித்திருந்ததாக மஇகா தலை வர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் மசீச தலைவர் வீ கா சியோங்கும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை யில் தெரிவித்துள்ளனர்.
கூட்டணியின் தலைவிதியை நிர்ணயிக்க உடனடியாகக் கூட்டம் நடத்த தேசிய முன்னணி தலைமையை தாங்கள் அப்போது வலியுறுத்தியதாகவும் அறிக்கை யில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.