போல்டன்: டிரம்ப்-கிம் சந்திப்பு தோல்வியில்லை

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இரு வருக்கும் இடையே கடந்த வாரம் இடம்பெற்ற உச்சநிலைச் சந்திப்பு தோல்வி அடையவில்லை என்று அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரி வித்துள்ளார்.
இரு நாட்டுத் தலைவர்களும் இரண்டாவது முறையாக வியட் னாம் தலைநகர் ஹனோயில் சந்தித்த பின் ஒப்பந்தம் ஏதுமில் லாமல் நாடு திரும்பினர்.
இந்தச் சந்திப்பால் கொரிய தீபகற்பத்தில் பெரிதாக மாற்றத்தை உருவாக்கும் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என உலக நாடுகள் பெரிதாக எதையும் எதிர்பார்க்க வில்லை. 
இருந்தாலும் ஓரளவுக்காவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என சிலர் எதிர்பார்த்தனர். 

வடகொரியத் தலைவர் கிம் தன்னிடம் இருக்கும் அனைத்து அணுவாயுதங்களையும் தயாரிப்பு மையங்களையும் மூடிவிட சம்ம திப்பார் என திரு டிரம்ப் எதிர் பார்த்தார். வடகொரியா மீது அமெ ரிக்கா விதித்துள்ள வர்த்தகத் தடைகள் அனைத்தையும் திரு டிரம்ப் நீக்க வேண்டும் என திரு கிம் கோரினார். ஆனால், இறுதி யில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை. பெரிய எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் நடை பெற்ற அவர்களது சந்திப்பு தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிப்பதாக பலரிடையே கருத்து நிலவி வந்தது. அவ்வாறு கருதப் படுவதை திரு போல்டன் பகிரங்க மாக மறுத்துள்ளார். 

“சந்திப்பு தோல்வியடைந்து விட்டது என்பதை என்னால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடி யாது,” என்று அவர் நேற்று முன் தினம் கூறினார்.
அணுவாயுதக் களைவு நடவடிக் கைகளை மேற்கொள்வதற்கான பியோங்யாங்கின் கடப்பாடுகளைப் பெறுவதில் திரு டிரம்ப் தோல்வி கண்டபோதும் அமெரிக்கர்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதில் அவர் வெற்றியடைந்ததாகவே கருத்தில்கொள்ள வேண்டும் என்று திரு போல்டன் எடுத்து ரைத்தார்.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் தமது அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலரை நன்கொடையாக வழங்காவிட்டால் அவரே பல ஆண்டு காலமாக முதலிடத்தில் நீடித்திருப்பார் என புளூம்பர்க் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

18 Jul 2019

உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்துக்குச் சரிந்த பில்கேட்ஸ்