மலேசிய பத்துமலை ஆலய அதிகாரி வீட்டில் சோதனை

கோலாலம்பூர்: மலேசியாவின் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோயி லின் உயர் நிர்வாகி ஒருவர் வீட் டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், அதிரடி சோதனையை நடத்தி பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ் தான கோயிலுக்குச் சொந்தமான கோலாலம்பூரில் உள்ள நிலம் விற்கப்பட்டது தொடர்பில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்து சங்கம் ஒன்று, இந்த நில மேம்பாட்டுத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பி யிருந்தது. இதில் ஆலய அறங் காவலருக்குப் பெரும் பங்கு உண்டு என்றும் அது குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால் இதனை பத்துமலை ஆலய நிர்வாகக் குழுவின் தலை வரான ஆர். நடராஜா மறுத்திருந் தார்.
இந்நிலையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஏராளமான அதி காரிகள் நேற்று முன்தினம் இரவு 7.45 மணி அளவில் பத்துமலை கோயில் அலுவலகத்தையும் கோத்தா தாமான்சாராவில் உள்ள மூத்த நிர்வாகியின் இல்லத்தையும் சோதனையிட்டனர்.
படுக்கை அறையிலிருந்த ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த நிர்வாக அதி காரியின் வீட்டின் முன்பு இரண்டு ஆடம்பரக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததையும் அதி காரிகள் கவனத்தில் கொண்டனர்.
சோதனையின் முடிவில் பத்து மலை ஆலய நிர்வாகக் குழுவைச் சேர்ந்த உயர் அதிகாரி உட்பட மூன்று பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர் என்று மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணையில் உதவ மூவரையும் மார்ச் 7ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி நிக் முயிஸுடின் முஹமட் அனுமதி வழங்கியிருந்தார்.
மூவரில் ஒருவர், ‘டான்ஸ்ரீ’ பட்டம் பெற்ற உயர் நிர்வாகி என்று விசாரணை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார்.

20 Jun 2019

“நான் அவன் இல்லை”: சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள திரு டிரம்ப், “அமெரிக்காவை மீண்டும் சிறந்த இடத்துக்கு உயர்த்துவேன்,” என்று சூளுரைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

20 Jun 2019

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் அதிபர் டிரம்ப்