வாக்களிக்கும் வயதை 18ஆக குறைக்க மலேசிய அரசு திட்டம்

தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெறும் வயதை 21லிருந்து 18ஆகக் குறைக்க மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்நாட்டின் இளையர், விளையாட்டுத் துறை அமைச்சர் சையது சாதிக் சையது அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜூன் மாதம் நாடாளு மன்றம் கூடும்போது இது தொடர் பான சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அவர் கூறினார்.
"வாக்களிப்பு உரிமைக்கான வயது வரம்பை 18ஆகக் குறைத்து அரசியலமைப்புச் சட்டத்தில் மாற் றம் செய்ய அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது. அதை வரும் ஜூன்-ஜூலை மாதங்களில் நடை பெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றவும் முடிவு செய்துள்ளோம்," என்று திரு ரஹ்மான் சொன்னார்.
பொதுத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இளை யர்கள் விளங்கவேண்டும் எனத் தாங்கள் விரும்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
வாக்களிப்பதற்கான வயது வரம்பை 15வது பொதுத் தேர்தலில் இருந்து 21லிருந்து 18ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத் திலேயே பக்கத்தான் ஹரப்பான் அறிவித்தது.
இருந்தபோதும், வாக்களிப்பு வயது குறைக்கப்பட நாடாளுமன் றத்தில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அவ சியம். அதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!