நஜிப்பின் நீதிமன்ற விசாரணை இன்று

மலேசியாவின் முன்னையப் பிரதமர் நஜிப் ரசாக்கின் நீதிமன்ற விசாரணை மலேசிய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் என்று அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி முகம்மது நஸ்லன் விசாரிப்பார்.

நம்பிக்கை மோசடி தொடர்பான முன்று குற்றச்சாட்டுகள், பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிடும் ஒரு குற்றச்சாட்டு, 42 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை 66 வயது நஜிப் எதிர்நோக்குகிறார்.

அரசாங்க வழக்கறிஞர் குழுவை மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி டாமி தாமஸ் வழிநடத்துகிறார். இந்தக் குழுவுக்கு எதிராக ஷஃபி அப்துல்லாவும் அவரது குழுவினரும் வாதிடுவர் என்று பெர்னாமா பத்திரிகை தெரிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon