சுடச் சுடச் செய்திகள்

ஒஸ்மானின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு: ஜோகூர் முதல்வர் பதவியிலிருந்து ஒஸ்மான் சப்பியான் விலகியிருப்பதை ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹும் இஸ்கந்தர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதிடம் கடந்த வாரம் திரு ஒஸ்மான் சமர்ப்பித்திருந்த பதவி விலகல் கடிதம் ஜோகூர் சுல்தா னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 10 மணியளவில் ஜோகூர் சுல்தான் அக்கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக அம்மாநிலத் தலைமைச் செயலாளர் அஸ்மி ரொஹானி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
“புதிய முதலமைச்சரை நிய மிக்க சுல்தான் இப்ராஹிம் ஒப்புக் கொண்டார். பதவியேற்பு சடங்கு இன்று நடைபெறும்,” என்று திரு அஸ்மி கூறினார்.
ஜோகூரின் 17வது முதல்வராக பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த டாக்டர் சஹ்ருதீன் ஜமால் நியமிக் கப்படுவார் என்று பெரிதும் எதிர் பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் புத்ராஜெயாவில் சிங்கப்பூர், மலேசியத் தலைவர் களுக்கு இடையே நடைபெற்ற ஓய்வுத்தளச் சந்திப்பில் திரு ஒஸ்மான் பங்கேற்காதது ஊடகங் களிடையே கேள்விகளை எழுப்பி இருந்தது. 
ஜோகூர் பேராளர் குழுவில் அவருக்குப் பதிலாக டாக்டர் சஹ்ருதீன் இடம்பெற்று இருந் தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon