இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள்; 100க்கும் மேற்பட்டோர் மரணம்

இலங்கையில் இன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகின. இதையடுத்து வெளிநாட்டவர் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இலங்கையிலுள்ள பல தேவாலயங்களைச் சுற்றி ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் மூன்று தேவாலயங்கள், மூன்று தங்கும் விடுதிகள் ஆகியவற்றில்  வெடிகுண்டுகள் வெடித்ததில் குறைந்தது 189 பேர் மரணம் அடைந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கொழும்புவில் ஒரு தேவாலயம் உட்பட பல நட்சத்திர தங்கும் விடுதிகளிலும் தலைநகருக்கு வெளியே இரு தேவாலயங்களிலும் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன.

கொழும்பு செயிண்ட் அந்தணோயிர் தேவாலயத்திலும் நீர்கொழும்பு (நிகாம்போ) நகரில் உள்ள செயிண்ட் செபெஸ்டியன் தேவாலயத்திலும் இன்று காலை வெடிகுண்டுகள் வெடித்தன. அதைத் தொடர்ந்து தலைநகர் கொழும்புவில் உள்ள மூன்று, நட்சத்திர தங்கும் விடுதிகளிலும் மட்டக்களப்புவில் (பட்டிக்கோலா) உள்ள தேவாலயம் ஒன்றிலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்புகளில் காயமுற்றதற்காக கொழும்பு பொது மருத்துவமனையில் குறைந்தது 160 பேரும் மட்டக்களப்பு மருத்துவமனையில் குறைந்தது 300 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

(காணொளி: செயிண்ட் செபெஸ்டியன் தேவாயலயம்/யூ டியூப்)

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. 

இதற்கிடையே கொழும்புவில் உள்ள ‌‌ஷங்ரிலா, கிங்க்ஸ்பரி, சின்னமன் கிராண்ட் நட்சத்திர தங்கும் விடுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நடந்தன. பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு அருகே உள்ள சின்னமன் கிராண்ட் தங்கும் விடுதியில் உணவகம் ஒன்றில் குண்டு வெடித்தது என்றும் அதில் குறைந்தது ஒருவர் மரணம் அடைந்துள்ளார் என்றும் இலங்கைக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன் காவல் துறை சிறப்பு அதிரடிப் படையினரும் மீட்புப் படையினரும் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனவும் இலங்கைக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பசிபிக் தீவுகள் மாநாட்டின்போது நடைபெற்ற தலைவர்களுக்கான ஒன்றுகூடலில் (இடமிருந்து வலம்) நியூசிலாந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன், ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா, சமோவா பிரதமர் துயிலேப்பா ஐயோனோ, மைக்ரோனீசியா கூட்டரசு மாநிலங்கள் பிரதமர் டேவிட் பனுவேலோ. படம்: இபிஏ

18 Aug 2019

ஃபிஜி பிரதமர்: ஆஸ்திரேலியப் பிரதமர் இழிவுபடுத்துகிறார்

பயங்கரவாதிகளை ஒழித்துவிட்ட தால் இலங்கை வருவோருக்கு நூறு விழுக்காடு பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறார் அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜான் அமரதுங்க. படம்: ஊடகம்

18 Aug 2019

இலங்கை அமைச்சர்: தற்கொலைத் தாக்குதலில் இந்திய நாட்டினருக்கு எந்தத் தொடர்புமில்லை

நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வை யிட்டனர். படம்: ஊடகம்

18 Aug 2019

ஈப்போ மகா மாரியம்மன் ஆலயத்தில் 15 சாமி சிலைகள் உடைப்பு; இந்தோனீசிய ஆடவர் கைது