ஆய்வு: குழந்தை வேண்டும் என்றால் வைஃபை வேண்டாம்

ஹாங்காங்: வைஃபை இணைப்புச் சாதனங்களை அதிகம் பயன்படுத் தும் ஆண்கள் மத்தியில் குழந் தைப் பிறப்பு விகிதம் குறைவதாக புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.

ஆண் விந்துக்களைக் கொல் வதுடன் தம்பதிகளுக்குக் குழந்தை பிறக்கும் சாத்தியத்தை இச்சாதனங்கள் வெகுவாகக் குறைப்பதாக ஜப்பானில் நடத்தப் பட்ட இந்த ஆய்வு தெரிவித்தது.

சென்ற ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை 51 ஆண்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வு, கை பேசிகள், வீட்டு இணையச் சாத னங்கள் போன்றவை மின்காந்த அலைகளின்வழி விந்துக்களின் செயல்பாட்டைப் பாதிப்பதுடன் அவற்றை அழித்திடவும் செய்வதாகக் கூறுகிறது.

சுகாதார முறையில் மின்காந்த அலைகள் மனிதர்களைப் பாதிக் காவிட்டாலும் நீண்ட காலப் பயன் பாட்டின் தாக்கத்தால் விந்துக் களின் ஆற்றல் பாதிப்புற்று குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

செயற்கை முறையில் கருத் தறிக்கும் சிகிச்சை பெற வந்த ஆண்கள் இந்த ஆய்வுக்காகத் தேர்வுசெய்யப்பட்டனர். அவர் களின் சராசரி வயது 38.

இவர்களிடமிருந்து பெறப்பட்ட விந்துக்கள் 30 நிமிடங்கள், 60 நிமிடங்கள், இரண்டு மணிநேரம், 24 மணிநேரம் ஆகிய காலக்கட்டங் களுக்கு மின்காந்த அலைகள் கொண்டு சோதிக்கப்பட்டன. இதில் குறைந்த அளவு நேரத்திற்கு மின்காந்த அலைகளின் தாக்கத் தைப் பெற்ற விந்துக்கள் அதிகம் பாதிப்படையவில்லை என்பது கண்டறியப்பட்டது.

புற்றுநோய், இருதயம் தொடர்பான நோய்கள் அடுத்து ஆண், பெண் இடையே மலட்டுத்தன்மை மூன்றாவது கொடிய நோயாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு முன்னுரைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!