முன்னாள் சிஐஏ அதிகாரிக்கு 20 ஆண்டு சிறை

வா‌ஷிங்டன்: சீனாவுக்கு வேவு பார்த்த குற்றத்துக்காக அமெரிக் காவின் உளவுத்துறை அமைப்பின் முன்னாள் அதிகாரிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்பான ரகசியத் தகவல்களை சீனாவிடம்  கொடுத்ததற்காக கெவின் பேட்ரிக் மெல்லோரிக்கு 25,000 அமெரிக்க டாலர் தரப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றம் தெரி வித்தது.

62 வயது மெல்லோரி ஆயுள் தண்டனையை எதிர்நோக்கினார்.  ஆனால் அவர் செய்த குற்றத் துக்கு அது மிகவும் கடுமை யானதாகிவிடும் என்று தெரிவித்த நீதிபதி, அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தார்.

2017ஆம் ஆண்டில் மெல் லோரி சீனாவுக்கு இருமுறை பயணம் மேற்கொண்டார்.

அப்போது உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் எளிதில் தொடர்புகொள்ள கைபேசி ஒன்றைத் தந்தார்.

குறைந்தது இரண்டு ரகசிய ஆவணங்கள் அந்தக் கைபேசி மூலம் அனுப்பப்பட்டதாக மத்திய புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.