உலோக வரியை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்

வா‌ஷிங்டன்: மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் உலோகங் களுக்கான வரிகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.

"கனடாவுடனும் மெக்சிகோ வுடனும் உடன்பாடு கண்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக் கிறேன். வரிகள் ஏதுமில்லாது அமெரிக்கத் தயாரிப்புகளை இந்த நாடுகளில் விற்பனை செய்யப் போகிறோம்," என்றார் அதிபர் டிரம்ப்.

அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்ற மெக்சிகோவும் கனடாவும் அமெரிக்காவிலிருந்து வரும் பன்றி இறைச்சி, பாலாடை, பால் ஆகியவற்றுக்கான வரிகளை ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், ஐரோப்பா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான முடிவை இன்னும் ஆறு மாதங்களுக்கு ஒத்திவைத்துள்ளார் அதிபர் டிரம்ப்.

பிற நாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் கார்களால் அமெரிக்க வாகனத்துறை பாதிப் படைந்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் டிரம்ப் எடுத்துள்ள இந்த முடிவுகளால் உலகளாவிய நிலையில் வர்த்தகப் போர் ஏற்படும் சாத்தியம் தவிர்க்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, அமெரிக்கா முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு சீனாவை பணிய வைப்பதில் அதிபர் டிரம்ப் தற்போது முழுகவனம் செலுத்தலாம் என்று கூறப்படுகிறது.

வர்த்தகப் போர் காரணமாக பல அமெரிக்க விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள் ளனர்.

இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவது முடியாத காரியமாகக்கூடும்.

இதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் இப்போதே எடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக் கின்றனர்.

250 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள சீனப் பொருட்களுக்கு அதிபர் டிரம்ப் வரி விதித்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா வரி விதித்துள்ளது.

சீனாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவெய்க்கு நெருக்கடி தரும் வகையில் அதற்கு எதிரான தடையை அதிபர் டிரம்ப் கடந்த புதன்கிழமையன்று அறிவித்தார்.

அமெரிக்காவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் விவசாயிகளுக்கும் பிற வர்த்தகங்களுக்கும் கடுமை யான பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!