பிரேசில் சிறையில் மோதல்: 15 கைதிகள் பலி

  1. சாவ் பாலோ: பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள அமேசோனா மாநிலத்தின் சிறை ஒன்றில் கைதிகளுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கைதிகள் 15 பேர் மாண்டு விட்டனர்.
  2. நேற்று முன்தினம் காலை 11 மணி அளவில் அந்தச் சிறையில் வருகையாளர்கள் நேரத்தின்போது கைதிகள் மோதிக்கொண்டனர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக சிறையின் உயர் அதிகாரி மார்கோஸ் வினிசியஸ் அல்மெய்டா என்பவர் தெரிவித்தார்.
  3. வன்முறை வெடித்த உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதிகமான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
  4. கைதிகள் மோதிக்கொள்ளும் இதே போன்ற சம்பவம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. 20 மணி நேரம் நடந்த அந்த வன்முறைச் சம்பவத்தில் 56 பேர் மாண்டனர்.
  5. உலகிலேயே அதிகமான கைதிகளைக் கொண்ட நாடுகளில் பிரேசில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு 2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 726,712 கைதிகள் இருந்தனர். அந்த எண்ணிக்கை இப்போது 368,049 ஆகியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. மிதமிஞ்சிய அளவில் கைதிகள் சிறையில் இருப்பதால் அவர்கள் அடிக்கடி கும்பலாக மோதிக் கொள்வர். ஆனால் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் எப்போதாவதுதான் வெடிக்கும் என்று கூறப்படுகிறது.
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!