மெக்சிகோ ஏற்றுமதிகளுக்கு வரி விதிப்பதில் எனக்குப் பிரச்சினையில்லை: டிரம்ப்

வா‌ஷிங்டன்: மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவின் தென் எல்லைப்பகுதி வழியாக சட்ட விரோதக் குடியேறிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதன் தொடர்பில் இவ்வாரம் நடை பெறவிருக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மெக்சிகோ ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா சுங்க வரி விதிப்பதில் தனக்கு “எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக் கிறார்.

குடிநுழைவு பற்றியும் எல்லையைக் கடக்கும் மக்களைத் தடுக்க மெக்சிகோ நடவடிக்கை எடுக்காவிட்டால் அதன் ஏற்றுமதிகளுக்குப் படிப் படியாக உயரும் சுங்க வரியை விதிக்கப்போவதாக தாம் விடுத்த மிரட்டல் பற்றியும் பேசுவதற்காக மெக்சிகோ அர சாங்கம் நாளை வா‌ஷிங்டனுக்கு பேராளர் குழுவை அனுப்பப் போவதாக திரு டிரம்ப் தெரி வித்தார்.

“எல்லாரும் மெக்சிகோ வழி யாக வருகிறார்கள். போதைப் பொருட்கள், ஆள்கடத்துவோர் உட்பட,” என்று நேற்று முன்தினம் வெள்ளை மாளிகை இலிருந்து பிரிட்டனுக்குப் புறப் படுகையில் திரு டிரம்ப் செய்தி யாளர்களிடம் சொன்னார்.

“நாங்கள் இதைத் தடுத்து நிறுத்தப்போகிறோம் அல்லது தொழில் செய்வதை நிறுத்தப் போகிறோம், அவ்வளவுதான். இது செய்யப்படாவிட்டால், நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது உங்க ளுக்குத் தெரியும். அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,” என்று சூசகமாகக் கூறினார் அவர்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை 530,000க்கும் அதிகமான கள்ளக் குடியேறிகள் அமெரிக்க எல்லையைக் கடந்த பிறகு பிடிபட்டனர் அல்லது அமெரிக்கா வுக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்று சுங்கத் துறை, எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!