விசாரணைக்கு ஒத்துழைக்காத லொக்மான் உட்பட இருவர் கைது

விசாரணைக்கு ஒத்துழைக்காத லொக்மான் உட்பட இருவர் கைது

1 mins read

ஓரினச் சேர்க்கை காணொளி சர்ச்சையைத் தொடர்ந்து மலேசிய போலிசார் தீவிர விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளதை அடுத்து அவர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த இரு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஜாங் ஹில்பார்க்கில் உள்ள அம்னோவின் உச்ச மன்ற உறுப்பி னரான லொக்மான் நூர் ஆடமின் வீட்டில் நடத்திய சோதனையின் போது அவர் தமது கைபேசியை போலிசிடம் ஒப்படைக்க மறுத்தார்.

மேலும், போலிசாரின் விசார ணைக்கு அவர் ஒத்துழைப்பு நல்க வில்லை. பணிகள் மேற்கொண்டு இருந்த போலிஸ் அதிகாரியிடம் அவர் குரலை உயர்த்திப் பேசினார்.

விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத அவரைக் கைது செய்ததாக சிலாங்கூர் போலிஸ் படையின் மூத்த உதவி ஆளுநர் ஃபட்பைல் அகமத் கூறியுள்ளார்.

லொக்மானுடன் இருந்த மலேசிய இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நாகப்பனையும் போலிசார் கைது செய்துள்ளனர். அவர் தகாத சொற்களைப் பயன்படுத்தி, அர சாங்க ஊழியர் பணிகள் மேற் கொள்ள தடையாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் விசாரணைக்காக காஜாங் போலிஸ் தலைமையகத் திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.