வடகொரியாவுக்கு உகந்த நடவடிக்கைகள்: டிரம்ப்

சோல்: வடகொரியாவுக்கு உகந்த நடவடிக்கைகளை எடுக்கத் தயார். ஆனால் வியட்னாமில் நடைபெற்ற உச்சநிலைக் கூட்டத்தில் முன்வைத்த திட்டத்தைவிட இன்னும் மேலான உத்தேச திட்டத்தை கிம் வெளியிட வேண்டும் என்று அண்மையில் நடந்த சந்திப்பில் வட கொரியத் தலைவர் கிம்மிடம் அதிபர் டிரம்ப் வலியுறுத்தியதாக 'யோமுரி ‌ஷிம்புன்' நாளிதழ் கூறியது.

முன்னதாக ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் வடகொரியாவுக்கு உகந்த நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அமெரிக்கா, வடகொரியா ஆகிய இரு நாடுகளிலும் தொடர்பு அலுவலகங்களை அமைப்பது, மனிதாபிமான அடிப்படையில் பொருளியல் உதவிகளை வழங்கு வது உட்பட வடகொரியாவுக்கு உகந்த நடவடிக்கைகளை எடுக்க மூன்று நாடுகளும் ஆலோசனை நடத்தின.

கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி 3வது முறையாக ராணுவமற்ற வட்டாரத்தில் சந்தித்த கிம்மும் டிரம்ப்பும் அணுவாயுதக் களைவு பற்றி பேசினர். ஆனால் இதில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ஹனோயில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வடமேற்கில் உள்ள யோங்பையான் அணுசக்தி வசதிகளை அழிக்க கிம் உறுதி கூறினார். அப்போது அதிபர் டிரம்ப், யூரேனியம் செறிவூட்டத்தையும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதனை செய்ய சம்மதித்த திரு கிம், தனது நாட்டுக்கு எதிரான தடைகள் விலக்கப்படும் அதே நேரத்தில் அணுவாயுதக் களைவுகளும் படிப்படியாக நிறை வேற்றப்படும் என்றார்.

மேலும் வடகொரியாவுக்கு எதிரான கொள்கைகளை அமெரிக்கா கைவிட வேண்டும் என்று கிம் கேட்டுக்கொண்டார்.இரு தரப்பினரும் தங்களது நிலையில் உறுதியாக இருந்ததால் உச்சநிலைப் பேச்சுவார்த்தை வழக்கம் போல முடிந்தது.

இதற்கிடையே வடகொரியா விலும் அமெரிக்காவிலும் தொடர்பு அலுவலகங்களை நிறுவும் உத்தேச திட்டம், வருங்காலத்தில் இரு நாடுகளிலும் தூதரக அலு வலகங்களை அமைக்க வழிவகுக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இவ்வாண்டு இறுதியில் மற்றொரு உச்சநிலை சந்திப்பில் அதிபர் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம்மும் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!