அரேபிய வாசகங்களையும் இஸ்லாமிய சின்னங்களையும் அகற்ற கடைக்காரர்களுக்குச் சீனா உத்தரவு

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலுள்ள இஸ்லாமிய உணவுக் கடைகளிலுள்ள அரேபிய வாசகங்களையும் இஸ்லாமியச் சின்னங்களையும் அகற்ற அந்நாட்டு அரசாங்கம் கடைக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்நாட்டின் முஸ்லிம்களை ‘சீனக் கலாசாரத்திற்குள்’ மேலும் அழுத்துவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கருதப்படுகிறது.

இஸ்லாமிய பிறை, ‘ஹலால்’ என்ற அரேபிய வாசகத்தைக் கொண்டுள்ள அறிவிப்புப் பலகைகள் ஆகியவற்றை அகற்ற அதிகாரிகள் தங்களுக்கு உத்தரவிட்டதாக பெய்ஜிங்கிலுள்ள சில கடைக்காரர்கள், அவர்களைக் காணச் சென்றிருந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன நிருபர்களிடம் தெரிவித்தனர்.

“இது வெளிநாட்டுக் கலாசாரமாக உள்ளது. நீங்கள் சீனக் கலாசாரத்தையே அதிகம் பயன்படுத்தவேண்டும்,” என்று சீன அரசாங்க அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக இஸ்லாமிய உணவுக் கடை உரிமையாளர் ஒருவர் சொன்னார்.

அரேபிய மொழிக்கும் இஸ்லாமியச் சின்னத்திற்கும் எதிரான சீனாவின் இயக்கம் 2016ஆம் ஆண்டு முதல் வேகமடைந்து வருகிறது. அனைவரும் சீனக் கலாசாரத்துடன் ஒத்துப்போகவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்நாட்டின் அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பாணியில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களின் குவிமாடங்களை அகற்றி சீன பாணியிலான கோபுரங்களை எழுப்ப அதிகாரிகள் சீன முஸ்லிம்களுக்கு நெருக்குதல் கொடுத்து வருவதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!