சாங்சுன்: வடகிழக்கு சீனாவின் ஜீல்லின் மாகாணத்தில் உள்ள நீர்பூங்காவில் ஏற்பட்ட இயந்திர கோளாற்றால், எழுந்த பேரலையில் 44 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர்.
யூலோங்ஷுயுன் என்ற நீர்பூங்காவில் கடந்த திங்களன்று நிகழ்ந்த இச்சம்பவத்தால் சிலருக்குக் கால், விலா எலும்பு முறிந்தது. லேசாக காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
இயந்திரக் கோளாறு காரணமாக வழக்கமாக எழும் அலைகளைவிட பேரலை எழுந்ததாகவும் இதில் மனித தவறு எதுவும் இல்லை என்றும் நீர்பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

