(காணொளி): மகாதீரின் சைக்கிள் பயணத்தால் இணையவாசிகள் மலைப்பு

மலேசியாவின் 94 வயது பிரதமர் மகாதீர் முகம்மது நேற்று முன்தினம் தனது சைக்கிளில் 11 கிலோமீட்டர் துாரம் சென்றார். தலைக்கவசம் அணிந்துகொண்டு அவர் சிவப்பு நிற சைக்கிளில் செல்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

“இன்று காலை நாங்கள் கிட்டத்தட்ட 11 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் சென்றோம். புத்துணர்ச்சியையும் துடிப்பையும் உணர்கிறோம், இறைவனுக்கு நன்றி” என்று டாக்டர் மகாதீர் இது தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளில் குறிப்பிட்டார். அவர் சைக்கிளில் செல்வதைக் கண்ட பொதுமக்களின் முகங்களில் வியப்பு தென்படுவதை அந்த 23-வினாடி காணொளி காட்டுகிறது.

Remote video URL

கடந்த மாதம் தமது பிறந்தநாளைக் கொண்டாடிய டாக்டர் மகாதீர், மலேசியாவின் பொருளியலை மீட்டெடுப்பதற்கான பணியை நிறைவேற்றுவதே தம் பிறந்த நாள் ஆசை எனத் தெரிவித்திருந்தார். இம்மாதத்தின் முற்பகுதியில் டாக்டர் மகாதீர், இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை மதிய உணவுக்காகத் தம் அலுவலகத்திலிருந்து பிரதமர் இல்லத்திற்குக் காரில் அழைத்துச் சென்றார். அந்தக் காரை டாக்டர் மகாதீரே ஓட்டியது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!