‘ஆப்பிள் டிவி’ சேவை வெளியீடு

‘ஆப்பிள் டிவி’ காணொளி ஒளிபரப்பு சேவையுடன் “ஆப்பிள் ஆர்க்கேட்” என்ற காணொளி விளையாட்டுச் சேவையை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்திலுள்ள ‘ஸ்டீவ் ஜாப்ஸ்’  அரங்கில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வெளியீடு நடைபெற்றது.

வரும் நவம்பர் 1ஆம் தேதி இந்தச் சேவை சிங்கப்பூர் உள்ளிட்ட 100 சந்தைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இங்கு இந்தச் சேவைக்கான மாதாந்திரக் கட்டணம் 6.98 வெள்ளி.

புதிய ஐபோன், ஐபேட் அல்லது ஆப்பிள் டிவியை வாங்குவோருக்கு ஆப்பிள் டிவிக்கான சந்தாத்தொகை ஓராண்டுக்கு இலவசம் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் தெரிவித்தார்.

இந்தச் சேவையில் வாடிக்கையாளர்கள் ஒன்பது நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம். மேலும் நிகழ்ச்சிகள் பின்னர் சேர்க்கப்படும்.

‘ஆப்பிள் ஆர்க்கேட்’ செப்டம்பர் 19ஆம் தேதி வெளியிடப்படும்.