புகைமூட்டத்தைப் பற்றி புலம்பும் மலேசியர்கள்

இந்தோனீசியாவின் பனைத்தோட்டங்களில் எரியும் தீயிலிருந்து கிளம்பும் புகைமூட்டம் குறித்து மலேசியர்கள் சமூக ஊடகங்களில் புலம்பி  வருகின்றனர். வறண்ட பருவத்தில் பனைமரம், பேப்பர் மரம் உள்ளிட்டவற்றை வளர்ப்பதற்கு  இந்தோனீசியாவில் காட்டு மரங்கள்  தீயில் இடப்படுகின்றன. இந்தத் தீயிலிருந்து வெளிவரும் புகையைத் தெற்கிலிருந்து வீசும் காற்று சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தள்ளுவதால் அவற்றின் மக்கள் பல்வேறு விதமான சுகாதாரப் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

புகைமூட்டத்தால் தங்களுக்குத் தோல் அரிப்பு, தொண்டை வலி, சளி ஆகியவை ஏற்படுவதாக மலேசியர்கள் சிலர் டுவிட்டரில் கூறுகின்றனர்.மலேசியாவிலுள்ள எட்டு மாநிலங்களில் 21 இடங்களின் காற்றுத்தரம் சுகாதாரத்திற்குக் கெடுதலான அளவிற்கு எட்டியுள்ளதாக அந்நாட்டின் காற்றுத்தரக் குறியீடு காட்டுகிறது.

(படம்: ராய்ட்டர்ஸ்)
(படம்: ராய்ட்டர்ஸ்)

கடந்த சில வாரங்களாக, சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் ஏற்பட்ட அவசரநிலையின் காரணமாக இந்தோனீசியா ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரை அனுப்பி தீயை அணைத்துள்ளது. இருப்பினும், இந்தப் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. 

இந்தோனீசியாவின் அண்டை நாடுகள் பல தடவை முறையிட்டபோதும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகப் பலமுறை உறுதி கூறி ஒவ்வொரு முறையும் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறுகிறது இந்தோனீசியா. 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய விமானப் படையைச் சேர்ந்த ஹெர்குலிஸ் சி-130 விமானத்தில் செயற்கை மழை உண்டாக்குவதற்குத் தேவையான உப்புக்கலவைகள் நிரம்பிய கலன்கள் ஏற்றப்படுகின்றன. சரவாக்கில் காற்று அபாயகரமான நிலையை எட்டியது நேற்று பிற்பகல் 2 மணிக்கு 412 ஆக இருந்து இரவு 8 மணிக்கு 404 என சற்றே குறைந்தது. படம்: பெர்னாமா

21 Sep 2019

சரவாக்கில் அபாயகரமான நிலையை எட்டிய புகைமூட்டம்; செயற்கை மழைக்கு முயற்சி

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளைக் காவல் காக்கும் மலேசியப் போலிசார். படம்: தி ஸ்டார் நாளிதழ்

21 Sep 2019

மலேசியாவில் பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியது

ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டில் நடைபெற்ற போராட்டம். படம்: இபிஏ

21 Sep 2019

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து உலகெங்கும் போராட்டத்தில் இறங்கிய மக்கள்