பொந்தியான்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள தஞ்சோங் பியாயில் இம்மாதம் 16ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆளும் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் சார்பாக கார்மேன் சார்டினி, தேசிய முன்னணி சார்பாக டாக்டர் வீ ஜீ செங், கெராக்கான் சார்பாக வென்டி சுப்ரமணியம், பெர்ஜாசா கட்சித் தலைவர் ப்ட்ருல்ஹிஷாம் அப்துல் அசிஸ் ஆகியோருடன் ஃபரிடா அர்யானி அப்துல் கஃபார், இங் சுவான் லோக் ஆகிய சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வாக்களிக்க சிங்கப்பூரிலிருந்து மலேசியா திரும்பும் மலேசியர்களுக்கு வசதியாக இம்மாதம் 16ஆம் தேதியன்று அதிகாலை 12 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மலேசியக் குடிநுழைவுச் சாவடியில் சிறப்புத் தடம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் ஆறு முனை போட்டி
1 mins read

