தென்மேற்கு பிரான்சில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரு காரும் ஒரு லாரியும் ஆற்றுக்குள் விழுந்தன. நேற்று முன்தினம் நடந்த இந்தச் சம்பவத்தில் 15 வயது பெண் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான்கு பேர் காப்பாற்றப்பட்டபோதும் மேலும் பலர் காணவில்லை.

மியரபுவா சுர் டான் நகருக்கும் பெஸ்ஸியரேக்கும் இடையிலான இந்த 155 மீட்டர் நீளமான பாலம், வேகமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த டார்ன் ஆற்றில் விழுந்து மூழ்கடிக்கப்பட்டது.
மீட்புப் பணியில் 60க்கும் மேற்பட்ட அவசர சேவை பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்களில் இருவர் கடுமையாகக் காயமடைந்ததாக பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணை தொடர்கிறது.