ஹாங்காங்: பாதுகாப்பு காரணங்களுக்காக புத்தாண்டு வாணவேடிக்கை கொண்டாட்டத்தை ஹாங்காங் ரத்து செய்துள்ளது. ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் நீடித்து வருவதைத் தொடர்ந்து ரத்து செய்யப்படும் ஆக அண்மைய கொண்டாட்டம் இது. வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதை ஹாங்காங் சுற்றுப் பயணக் கழகம் நேற்று உறுதி செய்தது. வாணவேடிக்கைக்குப் பதில் அன்றாட விளக்கு அலங்கார காட்சியின் மேம்பட்ட வடிவம் புத்தாண்டு தினத்திற்கு முதல்நாள் இடம்பெறும் என்று கழகம் குறிப்பிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதால் தற்போதைய ஹாங்காங் நிலவரத்தைக் கருத்தில்கொண்டு புத்தாண்டு கவுண்டவுன் நிகழ்ச்சி வேறு வடிவத்தில் வழங்கப்படும் என்று கழகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதுவரை இல்லாத வகையில் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களால் ஹாங்காங்கின் பொருளியல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.