சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்: 1எம்டிபி குற்றச்சாட்டு குறித்து தாய்லாந்து எச்சரிக்கை

பேங்காக்: மலேசியாவின் 1எம்டிபி ஊழல் வழக்கை மூடி மறைக்க தாய்லாந்து உதவியதாக கூறும் தடை செய்யப்பட்ட எதிர்கட்சி மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1எம்டிபி நிதி முறைகேட்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியான மலேசிய நிதியாளர் ஜோ லோவும் அவரது சகாக்களும் தாய்லாந்தைக் கடந்து செல்ல அனுமதி அளித்ததன் மூலம் அப்போதைய ராணுவ ஆட்சியாளரும் தற்போதைய பிரதமருமான பிரயுட் சான் ஓ சா, ஊழலை மூடிமறைக்க உதவியதாக, அண்மையில் தடைசெய்யப்பட்ட தாய்லாந்தின் எதிர்கால முற்போக்கு கட்சி தெரிவித்திருந்தது.

இதற்கு மறுப்பு தெரிவித்த அரசாங்க பேச்சாளர் ஒருவர், “எதிர்கட்சியின் குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல. அவை பொதுமக்களை குழப்பமடைய செய்கின்றன.

“சம்பந்தப்பட்ட அமைச்சுகள் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலனை செய்து வருகின்றன,” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

“குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. அவை உண்மையாக இல்லாத பட்சத்தில் பொய் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் பிரதமர் பிரயுட் சான் ஓச்சா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!