அதிபர் வேட்பாளர்: ஜனநாயக கட்சியின் புட்டிச் விலகல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவரும் இந்தியானாவின் முன்னாள் மேயருமான பெட்டெ புட்டிச் விலகியுள்ளார்.

இவ்வாண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளின் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் நியமனத் தேர்தல்கள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன.

இதில் 38 வயது ஓரினச் சேர்க்கையாளரான புட்டிச் ஐயோவா மாநில நியமனத் தேர்தலில் வெற்றிகரமான தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், அடுத்ததடுத்து வந்த நியமனத் தேர்தல்களில் தோற்று பின்னடைவைச் சந்தித்தார்.

அமெரிக்காவின் 14 மாநிலங்களில் இன்று நியமனத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புட்டிச்பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“அதிபர் வேட்பாளருக்கான போட்டியின் இக்கட்டத்தில், குறிக்கோள்கள், லட்சியங்களுடன் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான சிறந்த வழி, ஒதுங்கியிருந்து கட்சியையும் நமது தேசத்தையும் ஒன்றிணைக்க உதவுவதேயாகும்,” என்று அவர் கூறினார்.

இவரது விலகலையடுத்து, ஜோ பைடன், சாண்டர்ஸ், மைக்கேல் புளும்பெர்க், எலிசபெத் வாரென், ஏமி கோபுல்சூர் மற்றும் துளசி கப்பார்ட் ஆகியோர் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!