தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரிட்டிஷ் பிரதமர் ஜான்சன்

லண்­டன்: பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­ச­னுக்கு லண்­ட­னில் உள்ள செயிண்ட் தாம­ஸ் மருத்­து ­வ­ம­னை­யின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கிறது.

கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் அவ­ருக்கு ஏற்­பட்­டதை அடுத்து திரு ஜான்­சன் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு மருத்­து­வ­

ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், அவ­ரது உடல்­நிலை மோச­ம­டைந்­த­தைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்­சைப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டார்.

அவ­ருக்கு அங்கு உயிர் வாயு வழங்­கப்­பட்­ட­தாக பிரிட்­டிஷ் பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.

பிர­த­மர் ஜான்­சன் சுய­நி­னைவு­டன் இருப்­ப­தா­க­வும் ஒரு­வேளை அவ­ருக்கு செயற்கை சுவா­சக் கரு­வி­யின் உதவி தேவைப்­பட்­டால் அதை உடனே பெற ஏது­வாக தீவிர சிகிச்­சைப் பிரி­வுக்கு அவர் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

“பிர­த­மர் ஜான்­சன் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருக்­கி­றார். அங்கு அவ­ரது உடல்­நி­லையை மருத்­து­வக் குழு கண்­கா­ணித்து வரு­கிறது,” என்று அமைச்­சர் மைக்­கல் கோவ் கூறி­னார்.

இதற்கிடையே, இக்கட்டான நிலையில் இருக்கும் பிரிட்டனை வழிநடத்த தமக்கு உதவுமாறு வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப்பை திரு ஜான்சன் கேட்டுக்கொண்டார்.

இதை­ய­டுத்து, பிரிட்­ட­னின் கொவிட்-19 அவ­ச­ர­காலப் பணிக் குழு நடத்­திய கூட்­டத்­துக்­குத் திரு ராப் நேற்று தலை­மை­தாங்­கி­னார்.

பிரிட்­ட­னில் இது­வரை 5,373 பேர் கிரு­மித்­தொற்று கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

கொரோ­னா­வால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கும் சாத்­தி­யம் அதி­கம் இருப்­ப­தாக பிரிட்­டிஷ் சுகா­தார அமைச்­சர் அச்­சம் தெரி­வித்­தார்.

பிரிட்­ட­னில் தற்­போது முடக்­க­நிலை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. முடக்­க­நி­லைக்­கான விதி­மு­றை­க­ளைப் பலர் மீறு­வ­தால் அது நீட்­டிக்­கப்­ப­டக்கூடும் என்று பிரிட்­டிஷ் அமைச்­சர்­கள் சிலர் தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!