பெண்களைப் பற்றிய ஒசாக்கா மேயரின் கருத்துக்கு எதிர்ப்பு

தோக்­கியோ: கடை­க­ளுக்குப் பொருள் வாங்க பெண்­க­ளுக்­குப் பதில் ஆண்­களே செல்­ல­லாம் என்று கூறிய ஜப்­பா­னின் ஒசாக்கா நகர மேய­ருக்கு எதி­ராக சமூக ஊட­கங்­களில் குரல் எழுப்­பப்­பட்டு வரு­கிறது.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் வித­மாக ஜப்­பா­னில் நெருக்­க­டி­நிலை நடப்­பில் உள்­ளது. சில பகு­தி­களில் கடை­க­ளுக்­குச் செல்­வ­தைக் குறைத்­துக்­கொள்­ளு­மா­றும் அவ்­வாறு செல்ல நேர்ந்­தால் குடும்­பத்­தில் ஒரு­வர் மட்­டுமே செல்­லு­மா­றும் பொது­மக்­களை அர­சாங்க அதி­கா­ரி­கள் கேட்­டுக்­கொண்டு உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய ஒசாக்கா மேயர் இச்­சிரோ மட்­சுயி, 56, ஆண்­கள் கடை­க­ளுக்­குச் செல்­லும்­போது என்ன வாங்க வேண்­டுமோ அதனை வாங்­கி­விட்டு வேக­மாக வெளி­யே­று­கி­றார்­கள். அத­னால் மனி­தர்­க­ளி­டை­யி­லான தொடர்பு தவிர்க்­கப்

­ப­டு­கிறது.

“ஆனால் பெண்­கள் அதிக நேரம் எடுத்­துக்­கொள்­கி­றார்­கள். எதை வாங்­கு­வது என்று யோசித்­த­வாறே கடை­களில் நீண்ட நேரத்தை அவர்­கள் செல­வி­டு­கி­றார்­கள்,” என்று கூறி­னார்.

அவ­ரது கூற்று வெளி­யா­ன­தும் சமூக ஊட­கங்­களில் எதிர்ப்பு கிளம்­பி­யது. பெண்­களை மட்­டு­மல்­லாது ஆண்­க­ளை­யும் மேயர் அவ­ம­தித்­து­விட்­ட­தாக சிலர் கூறி­னர். பெண்­க­ளைப் பற்­றிய மேய­ரின் கருத்து தவ­றா­னது என்­றும் ஆண்­களும் கடை­களில் நிறைய நேரம் செல­வி­டு­வது அவ­ருக்­குத் தெரி­ய­வில்லை என்­றும் விமர்­சிக்­கப்­பட்டு வரு­கிறது.

மேய­ருக்கு ஆத­ர­வா­க­வும் கருத்­து­கள் கூறப்­ப­டு­கின்­றன. டுவிட்­ட­ரில் கருத்து தெரி­வித்த ஒரு­வர், “குறிப்­பாக வய­தான பெண்­கள், கடை­களில் பொருட்­களை வாங்­கு­வ­தை­விட பேச்­சில்­தான் அதி­கக் கவ­னம் செலுத்­து­ கி­றார்­கள்,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!