சுகாதார பேரழிவை நோக்கி ஆப்கானிஸ்தான்

காபூல்: மோச­மான சுகா­தார அமைப்பு, ஊட்­டச்­சத்துக் குறை­பாடு, போர் மற்­றும் பிற பாதிப்­பு­க­ளால் சூழப்­பட்­டுள்ள ஆப்­கா­னிஸ்­தான், கொரோனா கொள்ளை நோயால் ‘சுகா­தார பேர­ழிவை’ எதிர்­கொள்ள வாய்ப்­புள்­ள­தாக அமெ­ரிக்கக் கண்­கா­ணிப்பு குழு­வின் அறிக்கை ஒன்று எச்­ச­ரித்­துள்­ளது.

இத­னால் அமெ­ரிக்­கா­வின் சமா­தான முயற்­சி­கள் தொடர்ந்து தடைப்ப­டு­வ­தற்­கான அச்­சு­றுத்­தல் நில­வு­வ­தா­க­வும் சொன்­னார் ஆப்­கா­னிஸ்­தான் புன­ர­மைப்­புக்­கான சிறப்பு ஆய்­வா­ள­ரான ஜான் சோப்கோ.

இதற்­கி­டையே, கிரு­மிப் பர­வல் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான போரா­ளி­க­ளை­யும் அர­சாங்க கைதி­க­ளை­யும் விடு­விக்­கு­மாறு தலி­பான் பயங்­க­ர­வாத அமைப்­பிற்­கும் ஆப்­கா­னிஸ்­தான் அதி­பர் அஷ்­ரப் கனிக்­கும் அமெ­ரிக்கா அழுத்­தம் கொடுத்து வரு­கிறது.

இதற்­கி­டையே, கொள்ளை நோய் பர­வல் கார­ண­மாக உண­வுப் பொருட்­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ள­தால், ஆப்­கா­னிஸ்­தா­னில் சுமார் 7 மில்­லி­யன் பிள்­ளை­கள் பசி­யால் வாடும் அபா­யத்தை எதிர்­நோக்­கு­வ­தாக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்­து­லக சமூ­கம் நட­வ­டிக்கை எடுக்­கா­விட்­டால் ஆப்­கா­னிஸ்­தான், ‘பசி, நோய் மற்­றும் மர­ணத்­தின் சூறா­வ­ளியை’ எதிர்­கொள்ள நேரி­டும் என்று கூறி­னார் ‘ஏ சேவ் தி சில்ட்­ரன்’ எனும் அற­நி­று­வ­னத்­தின் செய்தித் தொடர்பாளர்.

உலக உண­வுத் திட்ட அமைப்­பின் அறிக்­கைப்­படி, பஞ்­சம் ஏற்­ப­டக்­கூ­டிய நாடு­க­ளின் பட்­டி­ய­லில் ஆப்­கா­னிஸ்­தா­னைச் சேர்த்­துள்­ளது ஐநா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!