தாய்லாந்தில் திரண்ட மக்கள்

பேங்­காக்: தாய்­லாந்து மக்­கள் கிட்­டத்­தட்ட ஒரு மாத காலத்­துக்­குப் பின்­னர் நேற்று வெளி­யில் தாரா­ள­மாக நட­மா­டி­னர். பூங்­காக்­களில் உடற்­ப­யிற்­சி­களை ஆர்­வத்­து­டன் சிலர் மேற்­கொண்­டி­ருக்­கை­யில் மேலும் சிலர் முடி­வெட்­டிக் கொண்­ட­னர். கட்­டுப்­பா­டு­க­ளைப் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தும் நட­வ­டிக்­கையை தாய்­லாந்து நேற்று தொடங்­கி­யது.

கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் குறைந்­ததே அதற்கு முக்­கிய கார­ணம். அந்­நாட்­டில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை கடந்த வாரம் ஓரி­லக்­கத்­துக்கு இறங்­கி­ய­தால் கிரு­மிப் பர­வல் அச்­சம் ஓர­ளவு தணிந்­தது. அத­னைத் தொடர்ந்து நாட­ளா­விய கட்­டுப்­பாட்டு நீக்­கம் அறி­விக்­கப்­பட்­டா­லும் ஒவ்­வொரு மாநி­ல­மும் வெவ்­வேறு வகை­யான தளர்­வு­க­ளைக் கடைப்­பி­டித்­தன.

உண­வ­கங்­கள் திறக்­கப்­பட்­டன, முடி­தி­ருத்­தும் நிலை­யங்­கள் மீண்­டும் செயல்­பட்­டன, சந்­தை­களும் டென்­னிஸ் மைதா­னம், திறந்­த­வெளி விளை­யாட்­டுக் கூடங்­களும் நேற்று வழக்­க­நி­லைக்கு வந்­தன. கட்­டுப்­பா­டு­கள் விலக்­கிக்­கொள்­ளப் பட்­டதை அறிந்­த­தும் நேற்று முற்­ப­கல் 11 மணிக்கு முன்பே உள்­ளூர் பேரங்­கா­டி­களில் மக்­கள் திர­ளத் தொடங்­கி­னர்.

அத்­து­டன் ஏப்­ரல் முதல் தடை செய்­யப்­பட்­டி­ருந்த மது­பான விற்­பனை நேற்று மீண்­டும் தொடங்­கி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!