பிலிப்பீன்ஸ் குடும்பங்களின் ‘இரண்டாம் துயரம்’

மணிலா: கொரோனா கிரு­மித்­தொற்­றால் தங்­க­ளது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழந்து தவிக்­கும் நிலை­யில், அவர்­க­ளுக்கு உரிய இறு­திச் சடங்­கைச் செய்ய முடி­யா­த­தா­லும் பிலிப்­பீன்­சில் பல குடும்­பங்­கள் துய­ரத்­தில் ஆழ்ந்­துள்­ளன.

கத்­தோலிக்கக் கிறிஸ்­த­வர்­கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிலிப்­பீன்­சில் இறந்­த­வர்­க­ளின் உடல் பதப்­ப­டுத்­தப்­பட்டு, சில நாட்­க­ளே­னும் துக்­கம் அனு­ச­ரிப்­பது வழக்­க­மாக இருந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் உடல்­களை உட­ன­டி­யாக தக­னச்­சா­லைக்­குச் சென்று எரி­யூட்ட அல்­லது இடு­கா­டு­களில் புதைக்க அதி­காரி­கள் ஊக்­கு­விக்­கின்­ற­னர்.

கிரு­மித்­தொற்­றால் இறந்­த­வர்­களுக்­கான துக்க விழிப்­பிற்­கும் தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

கொரோனா தொற்­றால் மாண்­டோ­ரின் உடல்­கள் பிளாஸ்­டிக்­கால் சுற்­றப்­பட்டு, மருத்­து­வ­ம­னை­களில் இருந்து நேராக தக­னச்­சா­லைக்கு அல்­லது இடு­காட்­டிற்கு எடுத்­துச் செல்­லப்­ப­டு­வ­தால் அவர்­க­ளின் முகங்­க­ளைக் கூட இறுதி முறை­யாக அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர் பார்க்க முடி­யா­மல் போய்­வி­டு­கிறது.

தம் தந்தை கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தும் அவ­ரைப் பார்க்க முடி­ய­வில்லை, இறந்­த­பின்­னும் அவ­ரது முகத்­தைப் பார்க்க முடி­ய­வில்லை என வேத­னை­யு­டன் கூறி­னார் திரு லியாண்ட்ரோ ரெச­ரக்­‌ஷன், 26.

“என் தந்­தை­யார் இறந்­து­போன துய­ரத்­தில் இருக்­கும் எங்­க­ளுக்கு அவ­ருக்­குப் பிரி­யா­விடை அளிக்க முடி­யா­மல் போனது இரண்­டாம் துய­ரம்,” என்­றார் அவர்.

அத்­து­டன், இறந்த அனை­வ­ரது உடல்­களும் ஒரே மாதி­ரி­யாக பிளாஸ்­டிக்­கில் சுற்­றப்­பட்டு எடுத்­துச் செல்­லப்­ப­டு­வ­தால் தக­னம் செய்­த­ பின் தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அஸ்தி அவ­ரு­டை­ய­து­தானா என்­பதே சந்­தே­க­மா­கத்­தான் இருக்­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

“இது எங்­க­ளுக்­கும் வேதனை தரு­வ­தா­கத்­தான் உள்­ளது,” என்­றார் மணிலா தக­னச்­சா­லை­யில் பணி­யாற்றி வரும் 54 வயது ஊழி­யர் திரு ரோமியோ உசோன்.

“கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உடல்­களை அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர் கடை­சி­யாக ஒரு­முறை பார்க்க எங்­க­ளால் அனு­ம­திக்க முடி­யாது. ஏனெ­னில் அது அபா­ய­க­ர­மா­னது. அப்­ப­டிச் செய்­தால் நம்­மை­யும் கிருமி தொற்ற வாய்ப்­புள்­ளது,” என்­றார் அவர்.

கொரோனா கிருமி பிலிப்­பீன்­சில் இது­வரை கிட்­டத்­தட்ட 9,000 பேரை தொற்­றி­விட்­டது; 600க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!