போரிஸ் ஜான்சன்: ஒருவேளை நான் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர்

லண்டன்: தான் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டபோது, தன் மரணம் குறித்த செய்தியை எப்படி கையாள்வது என்று மருத்துவர்கள் தயாராக இருந்ததாகக் கூறியுள்ளார் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து மீண்டு வந்த 55 வயது பிரதமர் போரிஸ் ஜான்சன்.

கொரோனா தொற்றிலிருந்து தான் மீண்டு வந்ததைப் பற்றி பிரிட்டிஷ் ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்துகொண்ட அவர், “நான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது இக்கட்டான தருணம் என்பதை மறுக்கமுடியாது.

"என் நிலைமை மோசமடைந்துவிட்டால் அச்செய்தியை எப்படி அறிவிப்பது, என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

“என்னை உயிரோடு வைத்திருக்க, லிட்டர் கணக்கில் பிராணவாயு தேவைப்பட்டது. இதில் இருந்து எப்படி மீண்டு வரப்போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் நான் இறந்துவிடுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை,” என்று கூறினார்.

இதற்கிடையே, தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அண்மையில் பிறந்த தனது குழந்தைக்கு அவர்களின் பெயரைச் சூட்டியுள்ளார் ஜான்சன்.

வில்ஃபர்ட் லாரி நிகோலஸ் ஜான்ஸன் என்று குழந்தைக்குப் பெயரிடப்பட்டுள்ளது. அதில் நிகோலஸ் என்பது ஜான்சனுக்குச் சிகிச்சையளித்த நிக் பிரைஸ், நிக் ஹார்ட் ஆகிய இரு மருத்துவர்

களின் பெயரையும் குறிக்கிறது.

மார்ச் மாதத்தில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஜான்சன், வீ்ட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, மருத்துவமனையில் தீவிர

சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

10 நாட்களுக்கும் மேலான சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த ஜான்சன், கடந்த திங்கட்கிழமை பணிக்குத் திரும்பினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!