தாய்லாந்து: 10 மில்லியன் வேலைகள் பறிபோகும்

பேங்காக்: கொரோனா கிருமி தாய்லாந்தில் ஏற்படுத்திய பொருளியல் தாக்கம் மேலும் ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளியல் நாடான தாய்லாந்து 1.3 டிரில்லியன் பாட் (S$57 பில்லியன்) மதிப்புள்ள இழப்பைச் சந்திக்கும் என்றும் கிட்டத்தட்ட 10 மில்லியன் வேலைகள் பறிபோகக்கூடும் என்றும் வர்த்தகக் குழுக்கள் மதிப்பிட்டு உள்ளன.

“பொருளியல் மீதான தாக்கம் நீண்ட காலத்துக்கு நீடிக்கும். அடுத்த மூன்று மாதங்களில் நிலைமை மேம்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஆறு அல்லது ஒன்பது மாதங்கள் வரை பொருளியல் சிக்கலை எதிர்பார்க்கும் நிலை உள்ளது,” என்று பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

எனவே இழப்புகளைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் தயாராக வேண்டி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பொருளியல் சரிவை ஈடுகட்டும் முயற்சிகளில் ஒத்துழைக்க கடந்த மாதம் 20 செல்வந்தர்களின் ஒத்துழைப்பை பிரதமர் நாடினார்.

மேலும் சில பணக்காரர்களின் உதவி அவருக்குத் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. கொவிட்-19 பாதிப்புகளால் சிரமப்படும் மக்களுக்கு 1.9 டிரில்லியன் பாட் மதிப்புள்ள உதவித்தொகுப்புக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் தாய்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!