உலக சுகாதார நிறுவனத்தை நெருக்கும் தைவான்

தைப்பே: கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து நேரடித் தகவல் வேண்டும் என்று ைதவான் கேட்டுக்கொண்டுள்ளது.

இதைத் தெரிவித்த அந்நாட்டின் சுகாதார அமைச்சர் சென் ஷி சுங் கிருமி பற்றிய நேரடித் தகவல் கிைடக்கவில்லை என்பதால் அதைத் தடுக்கும் முயற்சிகள் காலதாமதம் அடைகின்றன என்று கூறியுள்ளார்.

இது கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொய்வை ஏற்படுத்தியதுடன் ைதவானின் சுகாதாரத்திற்கும் கேடு விளைவித்துள்ளதாக அவர் விளக்கினார்.

தைவானை சீனா தனது மாநிலங்களுள் ஒன்றாகக் கருதுகிறது. அதனால் உலக சுகாதார நிறுவனத்தில் தைவானுக்கு தனிப் பிரதிநிதித்துவம் தரப்படுவதையோ, அந்த அமைப்பில் அது பார்வையாளர் அந்தஸ்தைப் பெறுவதையோ சீனா எதிர்க்கிறது.

இது குறித்து வெளிநாட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்த திரு சென், “எங்களுக்கு உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து நேரடித் தகவல் தேவை.

“மற்றவர்களிடமிருந்து பெறும் தகவல்கள் எங்களுடைய நடவடிக்கைகளை தாமதப்படுத்துகின்றன. அத்துடன் நோய்ப் பரவல் தொடர்பான எங்களின் கணிப்பை தவறாக்குகின்றன. சுருங்கச் சொல்வதென்றால், உண்மை நிலவரம் எங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை.

“எங்களுக்கு உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து நேரடித் தகவல் கிடைக்குமானால், நாங்கள் நோய்ப் பரவலுக்கு எதிராக முன்யோசனையுடன் செயல்படவும் அதற்கேற்றவாறு தகுந்த கொள்கைகளை வகுத்து சரியானவற்றை நடை

முறைப்படுத்தவும் முடியும்.

“நோய்ப் பரவலுக்கு எதிரான எங்கள் நடவடிக்கைகளை நாங்கள் விரைந்து எடுக்க முடியும். இதன்மூலம் கிருமிப் பரவலைத் தடுக்கும் உலக நாடுகளின் முயற்சிகளுக்கு தைவான் பின்னடைவை ஏற்படுத்தாது,” என்று கூறினார்.

ைதவான் நோய் சம்பவங்களுக்கு தவறான தகவல்களைத் தந்தது, தகவல் கோரிக்கைகளை நிராகரித்தது, சீனாவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து தைவானின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காதது என உலக சுகாதார நிறுவனத்துக்கு எதிராக தைவான் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது இங்கு நினைவு கூரத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!