சுகாதார அமைப்பு: கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் கூடுதல் கவனம் தேவை

வாஷிங்­டன்: கொரோனா தொற்று முழு­மை­யா­கக் குறை­யாத நிலை­யில், உலக நாடு­கள் முடக்க கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­து­வ­தில் கூடு­தல் கவ­னம் கொள்ளவேண்டும் என்று உலக சுகா­தார அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது.

உலக நாடு­களில் கடந்த நான்கு மாதங்­க­ளாக கொரோனா கிருமி பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. சுமார் 180க்கும் அதி­க­மான நாடு­கள் பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் நோய்த் தொற்று சார்ந்­தும் பெரும் சரி­வைச் சந்­தித்­துள்­ளன.

இதில் அமெ­ரிக்கா, ஸ்பெ­யின், இத்­தாலி, பிரான்ஸ், ஜெர்­மனி போன்ற நாடு­கள் கடு­மை­யான பாதிப்­பைச் சந்­தித்­துள்­ளன. எனவே சரிந்­துள்ள பொரு­ளா­தா­ரத்தை மீட்­டெ­டுக்­கும் வகை­யில் உலக நாடு­கள் ஊர­டங்­கைத் தளர்த்­தும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில் உலக சுகா­தார அமைப்­பின் தலை­வர் டெட்­ரேஸ் அதா­னம் கெப்­ரி­யே­சஸ் கூறும்­போது, ''கட்டுப்பாடுகளைத் தளர்த்­தும்­போது கூடு­தல் கவ­னத்­து­டன் செயல்­பட வேண்­டும்.

"ஊர­டங்­கைத் தளர்த்­தி­னால் கிரு­மித்­தொற்று மீண்­டும் தலை­யெ­டுக்­கக்­கூ­டும். எனவே உலக நாடு­கள் பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­களை விரி­வு­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம்,'' என்று தெரி­வித்­துள்­ளார்.

கிருமிப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் 3,820,703 பேர் பாதிக்­க­பட்­டுள்­ள­னர். 265,094 பேர் பலி­யா­கி­­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!