பிரிட்டனில் இன்று முதல் தளர்வு

லண்­டன்: பிரிட்­ட­னில் கொரோனா கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் நடை­மு­றை­யில் உள்ள கட்­டுப்­பா­டு­களில் சில, இன்று முதல் தளர்த்­தப்­ப­டக்­கூ­டும் என்று நேற்று முன்­தி­னம் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் அறி­வித்­தார்.

தனது அமைச்­ச­ரவையுடன் இது­தொ­டர்­பாக மதிப்­பாய்வு செய்த பின்­னர் இது­கு­றித்த அறி­விப்பை அவர் நேற்று வெளி­யி­டு­வார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. முடக்க உத்­த­ர­வு­க­ளைத் தளர்த்­தும் திட்­டங்­க­ளின் ஒரு பகு­தி­யாக, தொடர்பு தட­ம­றி­த­லுக்­கான பெருந் திட்­டத்தை வெளி­யி­டு­வ­தாக அர­சாங்­கம் ஏற்­கெனவே கூறி­யுள்­ளது.

தளர்வு நட­வ­டிக்­கை­யின் ஒரு பகு­தி­யாக மக்­கள் வெளிப்­புற உடற்­ப­யிற்­சி­களில் ஈடு­பட அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பூங்­காக்­கள், காபி கடை­கள் போன்­ற­வைத் திறக்க அனு­ம­தி­ய­ளிக்­கப்­படும் என்­றும் கூறப்­ப­டு­கிறது. ஆனால் 2 மீட்­டர் சமூக இடை­வெ­ளி­யைக் கடை­பி­டிப்­பது கட்­டா­யம்.கோல்ஃப், டென்­னிஸ் போன்ற விளை­யாட்­டுக்­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டக்­கூ­டும்.

கடந்த மார்ச் 23ஆம் தேதி முடக்கக் கட்­டுப்­பா­டு­கள் நடைமுறைப்­ப­டுத்­தப்­பட்­டது. இதற்­கி­டையே, இம்­மாத இறு­திக்­குள் பரி­சோ­தனை எண்­ணிக்­கையை ஒரு­நா­ளுக்கு 200,000ஆக உயர்த்­து­வ­தற்­கான புதிய இலக்கு பற்­றி­யும் நாடா­ளு­மன்­றத்­தில் அவர் சொன்­னார். பிரிட்­ட­னில் தற்­போது ஒரு­நா­ளுக்கு 108,000 பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இதற்­கி­டையே, 300 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு பிரிட்­டன் மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார வீழ்ச்­சியை எதிர்­கொள்­ளக்­கூ­டும் என்று பேங்க் ஆஃப் இங்­கி­லாந்து கணித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!