ஆஸ்திரேலியாவின் பெரிய மாநிலங்கள் கட்டுப்பாடுகளைத் தகர்க்க தயக்கம்

அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள் கொவிட்-19 கட்டுப்பாடுகளை நேற்று தகர்க்கவில்லை.

சிறிய அளவிலான ஒன்றுகூடல்களை அனுமதிப்பதுடன் வர்த்தகங்களை மீண்டும் செயல்படவைக்கும் வகையில் மத்திய அரசின் மூன்று கட்ட திட்டத்தின்படி உணவகங்களையும் சிறிய மாநிலங்கள் நேற்று திறக்க அனுமதித்தன.

கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல மூன்று கட்ட செயல்முறையை பிரதமர் ஸ்காட் மொரிசன் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

கொவிட்-19 கிருமித் தொற்றை ஆஸ்திரேலியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திவருகிறது. தினமும் 20க்கும் குறைவானோருக்கே கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் 100க்கும் குறைவாகவே உள்ளது.

தலைநகர் கான்பெரா உட்பட சில மாநிலங்களில் நேற்று முதல் மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கத் தொடங்கிவிட்டனர். 10 பேருக்குள் அடங்கிய ஒன்றுகூடல்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் திங்கட்கிழமை முதல் உணவகங்களில் 10 பேர் வரை உணவருந்தலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!