தென்கொரிய தலைநகரில் இரவு விடுதிகளை மூட உத்தரவு

சோல்: தென்கொரியத் தலைநகர் சோலில் இரவு கேளிக்கை விடுதிகளுடன் தொடர்புடைய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ள வேளையில், அப்பகுதியில் உள்ள இரவு விடுதிகள், மதுபானக் கூடங்களை மூட சோல் நகர அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் 29 வயது நோயாளி ஒருவர் சோல் நகரில் உள்ள ஒரு சில இரவு விடுதிகளுக்குச் சென்றிருக்கிறார். அந்த விடுதிகளுடன் தொடர்புடைய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை நேற்று நண்பகல் நிலவரப்படி 40ஆக அதிகரித்துள்ளதாக சோல் நகர மேயர் பார்க் வோன் சூன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தென்கொரியாவில் இரண்டாவது கிருமித்தொற்று அலையைத் தவிர்க்கும் நோக்கில் இரவு விடுதிகளை மூட அவர் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு அடுத்ததாக நிலையில் ஆக அதிகமான கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களை தென்கொரியா உறுதிப்படுத்தி இருந்தது. எனினும், நாட்டை முடக்குவது, வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் கிருமிப் பரவலை தென்கொரியா கட்டுப்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!