நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்

அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொழிற்சாலையில் இருந்து கசிந்த வாயுவால் 12 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று விசாகப்பட்டினத்தில் உள்ள தொழிற்சாலையின் அலுவலகம் முன்பு ஏராளமானோர் திரண்டனர். அப்போது உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே, விபத்து நிகழ்ந்த தொழிற்சாலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. எனினும் இரண்டு முறை வாயுக்கசிவு ஏற்பட்டதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆந்திர மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!