கொரோனா கிருமித்தொற்றுக்கு மாயாஜால நிபுணர் பலியானார்

வாஷிங்டன்: உலக அளவில் மாயாஜால மேடைக்கலை வித்தைகளில் கைதேர்ந்த செய்க்ஃபிரட் மற்றும் ராய் ஹார்ன் இருவரில் ராய், 75, கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று அவரின் விளம்பர அதிகாரி கூறினார்.

ஜெர்மனியில் பிறந்தவரான ராய்க்கு ஒரு வாரத்துக்கு முன் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பெரும் பெரும் புலி, சிங்கம் போன்ற மிருகங்களுடன் மாயாஜால நிகழ்ச்சிகளைப் படைப்பதில் செய்க்ஃபிரட், ராய் இருவரும் கைதேர்ந்த நிபுணர்கள்.

ராய் 2003ல் 180 கிலோ எடை யுள்ள வெள்ளை புலியுடன் நிகழ்ச்சி நடத்தியபோது திடீரென அந்தப் புலி அவரை மேடையில் இருந்து இழுத்துச் சென்றுவிட்டது. அதனால் அவர் கடுமையாகக் காயம் அடைந்தார்.

“இன்று உலகம் மாயாஜால நிபுணர்களில் ஒருவரை இழந்துவிட்டது. தலைசிறந்த நண்பரை நான் இழந்துவிட்டேன்,” என்று செய்க்ஃபிரட் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!