கொரோனா உலக இணக்கத் தீர்மானம்: ஐநா வாக்கெடுப்பை தடுத்தது அமெரிக்கா

ஐநா: கொரோனா கிருமித்தொற்று உலகையே மிரட்டி வருகிறது.

இத்தகைய நிலையில், உலகில் பல்வேறு இடங்களிலும் நிலவிவரும் சச்சரவுகளை எல்லாம் நிறுத்திவிட்டு கிருமி ஒழிப்பில் உலகம் ஒருமித்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் ஒரு தீர்மானம் ஐநா பாதுகாப்பு மன்றத்தில் வாக்கெடுப்புக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் வாக்கெடுப்பை அமெரிக்கா தடுத்துவிட்டது. அமெரிக்காவின் இந்தச் செய்கையைக் கண்டு ஐநா பாதுகாப்பு மன்ற நாடுகள் அதிர்ச்சி அடைந்துவிட்டதாக அரசதந்திரிகள் தெரிவித்தனர்.

தீர்மானத்தில் கண்டுள்ள குறிப்புகளை தான் ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா அறிவித்து இருந்தது. ஆனால் அடுத்த நாளே அந்த நிலையில் இருந்து அமெரிக்கா மாறிவிட்டது என்று தங்கள் பெயரைத் தெரிவிக்க விரும்பாத பிரமுகர்கள் குறிப்பிட்டனர்.

இப்போதைய தீர்மான நகலை ஏற்க முடியாது என்று ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட இதர 14 நாடுகளிடம் அமெரிக்கக் குழுவினர் தெரிவித்தனர். மேல் விவரங்களைக் கூற அவர்கள் மறுத்துவிட்டனர். ஏறக்குறைய இரண்டு மாத காலம் நடந்த சிரமமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்தத் தீர்மானம் உருவாக்கப்பட்டது.

இதுபற்றி கருத்து கேட்டபோது பாதுகாப்பு மன்றம் தனது முயற்சியில் முன்னேற்றம் காண்பதற்குத் தோதாக பல சலுகைகள் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால் சீனா அவற்றை எல்லாம் தடுத்துவிட்டதாகவும் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தை வர்ணிக்கும் வகையில் தீர்மானத்தில் இடம்பெற்று இருந்த வாசகங்களே வாக்கெடுப்பை அமெரிக்கா தடுத்ததற்குக் காரணம் என்று அரசதந்திரிகள் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஆனால் கொரோனா கிருமி ஒழிப்பில் ஒளிவுமறைவு இல்லாத நிலை வேண்டும் என்பதை தீர்மானம் தொடக்கத்தில் வலியுறுத்தியது என்றும் அதுபோலவே இப்போதைய தீர்மானமும் வலியுறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புவதாக வாஷிங்டன் வட்டாரங்கள் குறிப்பிட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!