உலகம் முழுவதும் 4 மி. பேர் கிருமியால் பாதிப்பு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக் கழகம் திரட்டிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் இதுவரை கொரோனாவுக்கு 277,000 பேர் பலியாகிவிட்டனர். அமெரிக்காதான் தற்போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது உலகம் முழுவதும் கிருமி தொற்றியவர்களில் கால்வாசிப் பேர் அமெரிக்கர்கள். கிருமிக்குப் பலியானவர்களில் மூன்றில் ஒருவர் அமெரிக்கராக இருக்கிறார். இந்த நிலையில் கொவிட்-19 கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை கணக்கிட்டதைவிட அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பல நாடுகளில் கிருமி சோதனை முறையாக நடைபெறவில்லை என்பதே அதற்கு காரணம்.

சில நாடுகளில் கிருமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தலைதூக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையே கொரோனாவால் வீழ்ந்து கிடக்கும் பொருளியலை மீட்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
சீனாவில் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மூத்த அதிகாரி ஒருவர், கிருமிப் பரவல் சுய பரிசோதனைக்கு வழி வகுத்து உள்ளது என்றார்.
நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார துறையில் உள்ள பலவீனங்களை கிருமி வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

கிருமிப் பரவல் குறித்து சீனா முன்கூட்டியே எச்சரிக்கவில்லை என்று அமெரிக்கா உட்பட சில நாடுகள் குற்றம்சாட்டி வரும் வேளையில் சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் லி பின் முதல் முறையாக சீனாவின் சுகாதாரத் துறையின் பலவீனம் குறித்து பேசியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!