தென் கொரியாவில் மீண்டும் தலைதூக்கும் ‘கொவிட்-19’ கிருமி

சோல்: தென் கொரியாவில் 34 புதிய கிருமித் தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

இது, இம்மாதம் ஏற்பட்டுள்ள கிருமித் தொற்றுகளில் ஆக அதிகம் என்று கொரிய நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் தெரிவித்தது.

புதிய சம்பவங்களில் 26 உள்ளூர் சமூகத்தில் பரவியது என்றும் எட்டுப் பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றும் அது கூறியது.

ஏப்ரல் 9ஆம் தேதிக்குப் பிறகு நேற்று அதிகமானோர் கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று நிலையம் குறிப்பிட்டது.

கடந்த பத்து நாட்களாக தென் கொரியாவில் புதிய கிருமித் தொற்று இல்லாமலும் அல்லது மிகவும் குறைவான எண்ணிக்கையில் கிருமித் தொற்று சம்பவங்கள் ஏற்பட்டதாகவும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே தென் கொரியாவில் மீண்டும் தலை காட்டியுள்ள கிருமித் தொற்று சம்பவங்கள் குறைவாக இருந்தாலும் சோல் நகர இரவு விடுதிகளில் கிருமி வேகமாகப் பரவி வருகிறது.

இரவு விடுதிகளுக்கு சென்ற இருபது வயது வாலிபருக்கு கிருமித் தொற்றியதால் அவருடன் தொடர்பு உடைய குறைந்தது 15 பேருக்கு கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் இரவு விடுதிகளுக்குச் சென்ற 1,500 பேர் அடங்கிய பட்டியலை அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.

வார இறுதியில் இரவு விடுதிகளுக்குச் சென்றவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கிருமிப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!