சுடச் சுடச் செய்திகள்

ஏழைகளுக்காக ‘அரிசி ஏடிஎம்’

கொரோனா கிருமிச் சம்பவங்களால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு இந்தோனீசிய அரசாங்கம் அரிசி வழங்கி உதவி வருகிறது.

ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் தரம் உயர்ந்த 1.5 கிலோ அரிசி அளிக்கப்படுகிறது. 

ஏடிஎம் போன்ற இயந்திரம் அரிசி விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

தலைநகர் ஜகார்த்தா முழுவதும் இவ்வாறு பத்து அரிசி விநியோக இயந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

வேலை இழந்தோர், கூலித் தொழிலாளர்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர், வீடில்லாதோர் ஆகியோர் அரசாங்கம் வழங்கும் இலவச அரிசித் திட்டத்துக்கு தகுதி பெறுவர். 

தென் கிழக்காசியாவின் ஆகப் பெரிய பொருளியல் நாடான இந்தோனீசியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த மார்ச் மாதம் $25 பில்லியன் பெறுமான உதவித் தொகுப்பு அறிவிக்கப்பட்டது.

அரிசி விநியோகமும் அதனுள் அடங்கும். நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு 1.5 டன் அரிசியை இயந்திரம் விநியோகிப்பதாக அதனை பராமரிக்கும் இப்ராகிம் என்னும் ராணுவ வீரர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து இந்தோனீசியாவில் 14,000க்கும் மேற்பட்டவர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 1,000 பேருக்கு மேல் மாண்டுவிட்டனர்.

சீனாவுக்கு வெளியே கிழக்காசியாவில் அதிகமான மரணங்கள் இங்கு நிகழ்ந்துள்ளன.

 

முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online