மணிலாவில் இம்மாத இறுதி வரை கட்டுப்பாடு

மணிலா: பிலிப்பீன்ஸின் முக்கால் வாசிப் பகுதிகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டு வருகிறபோதிலும் தலைநகர் மணிலாவிலும் மேலும் இரு நகர்ப்புற மையங்களிலும் கட்டுப்பாடுகள் இம்மாதம் இறுதி வரை நீடிக்கும். அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே நேற்று இதனை அறிவித்தார்.

கட்டுப்பாட்டு விதிகளை முறையாகப் பின்பற்றாமல் போனால் இரண்டாவது அல்லது மூன்றாவது கிருமிப் பரவல் அலையை நம்மால் தாங்க முடியாது என்று அவர் நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் எச்சரித்தார்.

“கொவிட்-19 என்பது கொடூரமானது. உங்களது சொந்த உயிரோடு விளையாடாதீர்கள். நீங்கள் வீட்டில் நிம்மதியாக தூங்கப் போகிறீர்களா அல்லது ஒரேயடியாக தூங்கப் போகிறீர்களா என்பதை கொவிட்-19 கிருமிதான் தீர்மானிக்கிறது. எனவே சில பகுதிகள் தொடர்ந்து முடக்கிவைக்கப்பட்டு இருக்கும்,” என்றார் திரு டுட்டர்ட்டே.

நாட்டின் 50 விழுக்காட்டு தயாரிப்புத்துறை, தொழிற்சாலைகள் திறக்கப்படும். அதேவேளையில் அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடியிருக்கும் என்றும் திரு டுட்டர்ட்டே தெரிவித்தார்.

நாடு முழுதும் 11,000க்கு மேற்பட்டோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9,000 பேர் செபு, லகுனா, மணிலாவின் தென்பகுதி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். அதேபோல் நோய்த்தொற்றுக்குப் பலியான 726 பேரில் 526 பேர் மணிலாவையொட்டிய நகரங்களைச் சேர்ந்தவர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!