நியூசிலாந்து: 50 பில்லியன் டாலர் நிதித் திட்டம்

வெலிங்டன்: கொரோனா கிருமித்தொற்று தாக்கத்தால் வீழ்ச்சியடைந்துள்ள நியூசிலாந்துப் பொருளியலை மீட்க அந்நாட்டு அரசாங்கம் மாபெரும் அளவாக 50 பில்லியன் நியூசிலாந்து டாலர் (S$42.47 பி.) நிதித் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அந்நாட்டு நிதி அமைச்சர் கிராண்ட் ராபர்ட்சன் நேற்று தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் இதனை அறிவித்தார்.

உள்கட்டமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, வீடமைப்பு, சம்பள மானியத் திட்டத்தை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் இவ்வாண்டு செப்டம்பரில் நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த வேளையில், ஆட்சியைத் தொடர பிரதமர் ஜசிண்டா ஆர்டர்னின் நிலைக்கு இந்த நிதித் திட்டம் வலுச்சேர்க்கும் என கூறப்படுகிறது.

கொரோனா தாக்கத்தால் பெரிதும் அதிகரித்துள்ள வேலையின்மை விகிதத்தைப் பழைய நிலைக்குக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக திருவாட்டி ஆர்டர்ன் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!